‘விடுதலை’ போஸ்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் சூரி ட்வீட்….

‘விடுதலை’ போஸ்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் சூரி ட்வீட்….

தனது நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்தின் போஸ்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘விடுதலை’ போஸ்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் சூரி ட்வீட்….

‘அசுரன்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றி மாறன். சூரி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

‘விடுதலை’ போஸ்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் சூரி ட்வீட்….

ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் கிஷோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் செங்கல்பட்டு அருகே நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்‌ நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் சூரி போலீசாக ஒரு போஸ்டரிலும், கைதியாக விஜய் சேதுபதியும் ஒரு போஸ்டரும் இடம்பெற்றிருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த போஸ்டரை பார்த்து பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அந்த வகையில் ட்விட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன். சசிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பார்வைக்கு வாழ்த்தி வரவேற்று பேரன்பு அளித்த திரைத்துறை சொந்தங்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் பேராதரவளித்த பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story