விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

‘விஜய் 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணையவுள்ளார்.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

நடிகர் விஜய்யின் 65வது படத்தை நெல்சன்‌ இயக்கி வருகிறார். கூட்டணியில் உருவாகும் படத்தின் விறுவிறுப்படைந்துள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

முதற்கட்ட ஷூட்டிங்கை ஜார்ஜியாவில் 16 நாட்கள் முடித்த படக்குழு, பின்னர் சென்னை திரும்பினர். அந்த ஷூட்டிங்கில் ஒரு பாடல் காட்சியும், ஒரு‌ சண்டை காட்சியும்‌ விறுவிறுப்பாக பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாகவும்,அதற்காக ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும்‌ கூறப்படுகிறது.

விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ இணைய உள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Share this story