மாடல் அழகியின் கொலை கண்டுபிடிக்கும் விஜய் ஆண்டனி... ‘கொலை’ டிரெய்லர் வெளியீடு !

kolai

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பன்முக திறமைக் கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.

kolai

இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.  இந்த படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. மாடல் அழகின் மர்மமான கொலையை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story