தளபதி 65 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம்!?

தளபதி 65 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம்!?

விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜயின் 65-வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தளபதி 65 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம்!?

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த போதே விஜய் இந்தப் படத்தில் ரா ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இந்தப் படத்தில் விஜய்க்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. எனவே இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தளபதி 65 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம்!?

விஜய் இந்தப் படத்தில் ஒரு அண்டர்கவர் ரா(RAW) அமைப்பு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் கூர்மையான புத்தியுடனும், வழக்கம் போல சற்று காமெடி கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பிற்காக இடத்தைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Share this story