ஓடிடி பக்கம் திரும்பும் விஜய் தேவரகொண்டா!?

ஓடிடி பக்கம் திரும்பும் விஜய் தேவரகொண்டா!?

விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் லைகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக ‘வேர்ல்டு பேமஸ் லவர்’ திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது லைகர் படத்தின் மூலம் அதைச் சரி செய்ய கடினமாக உழைத்து வருகிறார்.

ஓடிடி பக்கம் திரும்பும் விஜய் தேவரகொண்டா!?

ஆனால் ‘லைகர்’ படம் வெளியாக அதிக காலம் எடுக்கும் என்பதால் அதற்கிடையில் ஓடிடி-யில் ஒரு நிகழ்ச்சி நடத்த விஜய் தேவரகொண்டா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த லாக்டவுன் நேரத்தில் விஜய் பல கதைகளைக் கேட்டு வருகிறாராம். தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஓடிடி நிகழ்ச்சி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story