கைக்குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டிய விஜய் – என்ன பெயர் தெரியுமா..?

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.அந்தவகையில் இந்த ஆண்டு கல்வி விருதுக்கு தேர்வான மாணவ மாணவிகளை இரண்டாக பிரித்து விருது வழங்கி வருகிறார் .
இந்நிலையில் கல்வி விருது முதல் பாகம் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று இந்த விருது விழாவின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்ப்பை கொடுத்து மகிழ்ந்தனர்.
இதோடு மட்டுமல்லாமல் இந்த விழாவில் பல சுவாரஸ்ய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 2 மாத பெண் குழந்தைக்கு அதன் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று ‘தமிழரசி’ என்ற அழகிய தமிழ் பெயரை விஜய் சூட்டியுள்ளார் .