அடுத்த வருஷம் வரிசையாக மூன்று படங்களைக் களமிறக்கும் விஜய்!

அடுத்த வருஷம் வரிசையாக மூன்று படங்களைக் களமிறக்கும் விஜய்!

விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விஜய் வளர்ந்து வந்த காலங்களில் ஒரே வருடத்தில் அவரது மூன்று படங்கள் வரை வெளியானது. அதையடுத்து மாஸ் என்ற வரையறைக்குள் வந்ததும் வருடத்திற்கு ஒரு படம் அல்லது பண்டிகை நாட்களில் மட்டும் படங்கள் வெளியிடுவது என்று மாறியது.

அடுத்த வருஷம் வரிசையாக மூன்று படங்களைக் களமிறக்கும் விஜய்!

ஆனால், அடுத்த வருடம் விஜய் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் விஜய் வேறு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படங்களில் அடுத்த வருடன் கோடை விடுமுறையில் ஒரு படமும், தீபாவளிக்கு ஒரு படமும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே அடுத்த வருடம் விஜய் ஹாட்ரிக் ரிலீஸ் கொடுப்பதாக இருந்தால் அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

Share this story