‘தளபதி 65’ படக்குழுவினரிடம் விஜய் வைத்துள்ள கோரிக்கை!

‘தளபதி 65’ படக்குழுவினரிடம் விஜய் வைத்துள்ள கோரிக்கை!

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் ஒரு பெரிய வணிக வளாகம் போன்ற செட் அமைக்கப்பட்டு வருவதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

‘தளபதி 65’ படக்குழுவினரிடம் விஜய் வைத்துள்ள கோரிக்கை!

தற்போது கொரோனா பாதிப்பு கணக்கில்லாமல் உயர்ந்து வருவதால் செட் அமைக்கும் பணியை நிறுத்துமாறு விஜய் படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம். எனவே கொரோனாவின் தீவிரம் குறைந்தவுடன் மிகுந்த பாதுகாப்புடன் செட் அமைக்கும் பணிகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் 16 நாட்கள் நடந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கலாம் என்று கூறப்படுகிறது. அது முழுக்க சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Share this story