தொடங்கியது விஷால் - ஹரியின் பட ஷூட்டிங்... ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து காத்திருப்பதாக ட்வீட் !

vishal

விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‌விஷாலின் 34 வது படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார்.  மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

vishal

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 7-ஆம் தேதி இந்த படத்திற்கான ப்ரோமோ ஷூட் தொடங்கியது. போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விஷால், மூன்றாவது முறையாக ஹரியுடன் இணைந்துள்ளேன். முன்பு போலவே மீண்டும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க ஆவலாக இருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த படம் ஸ்பெஷல் விருந்தாக அமையும் என்று கூறியுள்ளார். 


 

Share this story