‘விடாமுயற்சி’ டிக்கெட் முன்பதிவு வசூல் நிலவரம் என்ன?

அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கான முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் வசூல் மட்டும் ரூ.10 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நாளை (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்துக்கான முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் ரூ.10 கோடியை எட்டிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 380 திரையரங்குகளில் 2,750 காட்சிகளுக்கு 5.5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. 55%-க்கும் அதிகமான பார்வையாளர்கள் அட்வான்ஸ் புக்கிங் மூலம் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர். அந்த நிலவரப்படி, அட்வான்ஸ் புக்கிங் வசூல் ரூ.10.5 கோடியை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.
‘விடாமுயற்சி’ நாளை (பிப்.6) ரிலீஸான பிறகு நேர்மறையான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில், பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியை நிச்சியம் பெறும் என்று திரை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ‘விடாமுயற்சி’ திரைப்படதுக்கு அட்வான்ஸ் புக்கிங்கில் வரவேற்பை பெற்றுள்ளது. 66,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு ரூ.1.85 கோடி வரை ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளது. ‘விடாமுயற்சி’ படத்துக்கு முதல் வார இறுதியில் மட்டும் (பிப்.6 முதல் பிப்.9 வரை) தமிழகம் முழுவதும் 375 திரையரங்குகளில் 8,500 காட்சிகள் மூலம் ரூ.21 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கஸண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது கவனிக்கத்தக்கது.