’7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா..?

answara rajan

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ’7ஜி ரெயின்போ காலனி' வெற்றி பெற்றதை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து, ஆங்கில புத்தாண்டையொட்டி '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

answara rajan
இந்த நிலையில், ’7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன். இவர் திரிஷா நடித்த 'ராங்கி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் வலம் வருகிறார். 2015-ம் ஆண்டு குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 2017-ம் ஆண்டு வெள்ளித்திரையிலும் 2019-ம் ஆண்டு வெளியான ’தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு திரிஷா நடிப்பில் வெளியான 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியான் 2' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். 14 படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share this story