நடிகர் பிரபுவிடம் மன்னிப்புக்கேட்ட கலக்கப்போவது யாரு டீம்..!

நடிகர் பிரபுவிடம் மன்னிப்புக்கேட்ட கலக்கப்போவது யாரு டீம்..!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனை கிண்டல் செய்வது போன்ற ஒரு எபிசோட் வைரல் ஆனது.

நடிகர் பிரபுவிடம் மன்னிப்புக்கேட்ட கலக்கப்போவது யாரு டீம்..!

இதனால் நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் மூலமாக அறிக்கை ஒன்று விஜய் டிவிக்கு அனுப்பப்பட்டது.

நடிகர் பிரபுவிடம் மன்னிப்புக்கேட்ட கலக்கப்போவது யாரு டீம்..!

மேலும் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர், பொதுவாக நடிகர்களை மிமிக்ரி செய்யும் போது அது ஒரு எல்லையோடு இருக்கவேண்டும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நடித்த நடிகர் திலகம் சிவாஜியை மிகவும் சங்கடப்படும் படியாக கிண்டல் செய்கின்றனர். அதுவும் மக்களை மிகப்பெரிய அளவில் சென்றடையும் ஒரு நிகழ்ச்சி வழியில் இப்படி கேலியும், கிண்டலும் செய்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் சிவாஜியை எப்படி நினைப்பார்கள்? அதனால் தான் கண்டனம் தெரிவித்ததாக கூறினார்.

இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட நடிகர் பிரபு,கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி குறித்து சேனலில் பேசியுள்ளார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய், ஆதவன், நிகழ்ச்சி இயக்குனர் தாம்சன் ஆகிய மூவரும் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்றும் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

Share this story