இனி பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் – கே.எஸ்.ரவிகுமார்

இனி பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் – கே.எஸ்.ரவிகுமார்

ஓடிடியால் திரையரங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அது சினிமாவுக்கான மாற்றுதளம் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இனி பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் – கே.எஸ்.ரவிகுமார்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதில்’. கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் சார்பில் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இனி பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் – கே.எஸ்.ரவிகுமார்

கொரானா காலக்கட்டத்தில் குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்ட இப்படம்‌‌ ஒரு சராசரி தந்தை எப்படி களத்தில் எதிரிகளை சந்தித்து வெற்றி பெறுகிறான் என்பது கதைகளமாகதான் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த கே.எஸ்.ரவிகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த படத்தின் ‌கதையை கேட்டபோது பிரம்மாண்டமாக இருந்தது. அதனால்தான் ஆர்வமாக இந்த படத்தில நடித்தேன். மேலும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியை தடுக்க இயலாது. ஒடிடியால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி அவர், அது சினிமாவுக்கான இன்னொரு தளம், அவ்வளவுதான் என குறிப்பிட்டார்.

இனி பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் – கே.எஸ்.ரவிகுமார்

இனி பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகும் என ‌குறிப்பிட்ட அவர், சூர்யா அதை முன்னரே தொடங்கிவிட்டார் என்றார். ரஜினி, கமல் படங்களை மீண்டும் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கதைகள் நிறைய வைத்திருக்கிறேன். நேரம் வந்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்றார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும்விட அவரது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று கூறினார்.

Share this story