கேரளா திரைப்பட விருது விழாவில் விருதுகளைக் குவித்து மாஸ் காட்டிய ‘கும்பலங்கி நைட்ஸ்’!

கேரளா திரைப்பட விருது விழாவில் விருதுகளைக் குவித்து மாஸ் காட்டிய ‘கும்பலங்கி நைட்ஸ்’!

கேரள மாநில அரசின் 2019-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகளில் ‘கும்பலங்கி நைட்ஸ்’ திரைப்படம் 4 விருதுகளை கைப்பற்றியுள்ளது.


மது சி நாராயணன் இயக்கத்தில் ஃபஹத் பாசில், சோபின் ஷாகிர் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாஸி, அன்னா பென், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படம் வெளியானது. ஒரு மீனவ கிராமத்தில் வாழும் நான்கு சகோதரர்கள் வாழ்க்கைப் பற்றிய இந்தப் படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Fahadh Faasil

ஃபஹத் பாசில் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர். சிறிய நடிகர்கள் கூட நடிப்பதற்குத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.


தற்போது கேரள அரசின் 50 ஆவது மாநில விருதுகள் திரைப்பட விருதுகளில் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது.

கேரளா திரைப்பட விருது விழாவில் விருதுகளைக் குவித்து மாஸ் காட்டிய ‘கும்பலங்கி நைட்ஸ்’!
kumbalangi-nights

2019-ம் ஆண்டின் சிறந்த பிரபல திரைப்படமாக கும்பலங்கி நைட்ஸ் திரைப்படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக ஃபஹத் பாசிலுக்கு சிறந்த குணசித்திர நடிகர் விருது கிடைத்துள்ளது.

கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக சுசின் ஷ்யாமிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.

பிரபலமான முறையீடு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த படம் என்ற பிரிவிலும் இந்தப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடித்த அன்னா பென்னிற்கு ஹெலன் படத்திற்காக நடுவர்களின் சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.

Share this story