தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தொடரும் விஜய் சேதுபதியின் லாபம் பட ட்ரைலர்!

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தொடரும் விஜய் சேதுபதியின் லாபம் பட ட்ரைலர்!

விஜய் சேதுபதி  நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது லாபம் ட்ரைலர் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.
Image
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜனநாதன் ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியுள்ளது.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தொடரும் விஜய் சேதுபதியின் லாபம் பட ட்ரைலர்!
அரசியல் களத்தில் படம் எடுப்பதில் ஜனநாதன் கைதேர்ந்தவர். லாபம் படத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியாக விவரித்துள்ளார். லாபம் படம் நேற்று வெளியாகி தற்போது வரை 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ட்ரெண்டிங்கிலும் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.
 

Share this story