குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து மனதை வென்ற பெண் தயாரிப்பாளர்!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து மனதை வென்ற பெண் தயாரிப்பாளர்!

பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் 42 லிட்டர் அளவிற்கு தாய்ப்பால் தானம் செய்துள்ளது பலரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

நடிகை டாப்ஸி பன்னு நடித்த ‘சாண்ட் கி ஆன்க்’ படத்தைத் தயாரித்தவர் பிரபலமான பாலிவுட் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தானி. இவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிதி பர்மர் குழந்தை பெற்றுள்ளார். இதையடுத்து லாக்டவுன் நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை தானமாக வழங்க முடிவு செய்தார். இதை அவரே இதை நேர்காணலில் உறுதிப் படுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து மனதை வென்ற பெண் தயாரிப்பாளர்!

“என் குழந்தைக்கு பாலூட்டிய பிறகு, என்னிடம் இன்னும் பயன்படுத்தப்படாமல் பால் மிச்சம் நிறைய இருப்பதை உணர்ந்தேன். ஒரு குளிர்சாதன பெட்டியில் ஒழுங்காக சேமித்து வைத்தால், தாய்ப் பால் 3 முதல் 4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் என்று நான் படித்தேன். நான் என் மகப்பேறு மருத்துவரை அணுகினேன், அவர் நன்கொடை மையங்களை அணுகுமாறு அறிவுறுத்தினார், இது முழுமையாகப் பயன்படுத்த எனக்கு உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் நிதி பர்மரின் இந்த செயல் பலரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Share this story