டேய் சும்மா இருடா… குறியீடுடன் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதைத் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!?

டேய் சும்மா இருடா… குறியீடுடன் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதைத் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். மேலும் தான் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டேன். சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்துள்ளது. அனைவரின் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்களித்ததை தெரிவிக்கும் வகையில் கையில் மை உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

டேய் சும்மா இருடா… குறியீடுடன் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதைத் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!?

இதற்கிடையில் லோகேஷ் வெளியிட்ட புகைப்படத்தில் பின்னாடி டிவியில் கமல்ஹாசன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் குறிப்பிட்ட இயக்குனர் ரத்னகுமார் “வீடு திரும்பியதற்கு வாழ்த்துக்கள் மச்சி… குறியீடு கண்டுபித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் “டேய் சும்மா இருடா” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story