‘பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன்’ – கவிஞர் வைரமுத்து

‘பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன்’ – கவிஞர் வைரமுத்து

கொரானா ஊடரங்கு நேரத்தில் பூக்காரிகள் சிலருக்கு பொருள் கொடுத்தேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கொரானா 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்தாலும், அது ஏற்படுத்திவிட்டு சென்ற வடு மிகவும் கொடூரமாக உள்ளது. கொரானா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். சாலையோரங்களில் வசிக்கும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

‘பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன்’ – கவிஞர் வைரமுத்து

கொரானா நேரத்தில் இதுபோன்று வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். இதனால் ஒரு வேளை உணவாவது கிடைத்து பட்டினியில்லாமல் நாட்களை கடந்து வருகின்றனர். பிரபலங்கள் தங்களால் முடித்த உதவியை உணவாகவோ, பொருட்களாகவோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பூ விற்கும் சில பெண்களுக்கு இதுபோன்ற உதவியை கவிஞர் வைரமுத்து செய்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊரடங்கில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன் பண்புடையீர்! உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஆழ்ந்து பாருங்கள் அற்ற வயிறும் இற்ற உயிரும் எத்துணையோ? சற்றே உதவுங்கள் சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Share this story