சென்னை ஓவர்… அடுத்து மாலத்தீவு செல்லும் மாநாடு டீம்!

சென்னை ஓவர்… அடுத்து மாலத்தீவு செல்லும் மாநாடு டீம்!

மாநாடு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாலத்தீவு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. சென்னையில் நடந்து வந்த அந்தப் படப்பிடிப்பு பகுதி நிறைவடைந்துள்ளதால் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மாலத்தீவு செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓவர்… அடுத்து மாலத்தீவு செல்லும் மாநாடு டீம்!

மேலும் இந்த மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாடு படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Share this story