கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை அசத்திய மகேஷ் பாபு!

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை அசத்திய மகேஷ் பாபு!

நடிகை கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவின் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமைமிக்க இளம் நடிகைகளில் ஒருவர். சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது திறமையின் மூலமே பல பட வாய்ப்புகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை அசத்திய மகேஷ் பாபு!

கீர்த்தி சுரேஷ் இன்று(அக்டோபர் 17) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து மழை ரசிகர்களிடமிருந்தும், திரையுலக பிரபலங்களிடமிருந்தும் குவிந்து வருகிறது. தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவும் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தனது படத்தில் கீர்த்தி நடிக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

மகேஷ் பாபு வெளியிட்டுள்ள பதிவில் “அற்புதத் திறமை கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சர்க்காரு வாரி பாட்டா குழுவிற்கு உங்களை வரவேற்கிறேன். இது நீங்கள் நடித்ததிலேயே சிறந்த படமாக இருக்கும் என்பது உறுதி. சிறந்த ஒன்றைப் பெறுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் “மிக்க நன்றி மகேஷ் பாபு சார். உங்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ்பாபுவின் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

Share this story