விஜய்யின் ரகசியத்தை உடைக்கும் ‘மாஸ்டர் நாயகி’ – என்ன சொல்றாருன்னு கேளுங்க…

விஜய்யின் ரகசியத்தை உடைக்கும் ‘மாஸ்டர் நாயகி’ – என்ன சொல்றாருன்னு கேளுங்க…

விஜய்யின் ஒழுக்கம் வியக்கத்தக்கது என மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ரகசியத்தை உடைக்கும் ‘மாஸ்டர் நாயகி’ – என்ன சொல்றாருன்னு கேளுங்க…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் படம் மாஸ்டர். மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளன. இப்படத்தில் தமிழில் முதல்முறையாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

விஜய்யின் ரகசியத்தை உடைக்கும் ‘மாஸ்டர் நாயகி’ – என்ன சொல்றாருன்னு கேளுங்க…

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு மாளவிகா மோகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அப்படி பார்க்கையில் விஜய் ஒழுக்கம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. அவர் தன்னை எப்படி தயார் செய்து கொள்கிறார் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

நட்சத்திர அந்தஸ்தை தாண்டி தொழில்முறையில் அவருடன் வேலை செய்ததது உற்சாகம் அளிக்கிறது. அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க நான் விரும்புகிறேன் என்று தனது பேட்டியை மாளவிகா மோகன் முடித்தார்.

Share this story