செல்லப் பெயரில் கூப்பிடும் விஜய்… சிலிர்க்கும் ‘மாளவிகா’

செல்லப் பெயரில் கூப்பிடும் விஜய்… சிலிர்க்கும் ‘மாளவிகா’

ஷூட்டிங் ஸ்பாட்டில் என் செல்லப் பெயரை வைத்துதான் விஜய் கூப்பிடுவார் என மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன், தனது படப்பிடிப்பு சுவாரஸ்சியங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

செல்லப் பெயரில் கூப்பிடும் விஜய்… சிலிர்க்கும் ‘மாளவிகா’
செல்லப் பெயரில் கூப்பிடும் விஜய்... சிலிர்க்கும் 'மாளவிகா'

விஜய் நடித்து பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய்யிக்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகன் நடிப்பு பெரிதும் பேசும்படியாக உள்ளது. அழகு பதுமையாக தோன்றும் மாளவிகா, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

செல்லப் பெயரில் கூப்பிடும் விஜய்… சிலிர்க்கும் ‘மாளவிகா’

கேரளத்து பெண்ணான மாளவிகா, முதலில் நடித்தப்படம் ‘பட்டம் போல’. கன்னடம், இந்தி படங்களில் கலக்கி வந்த அவர், முதல்முதலில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்தார். பின்னர் மாஸ்டர் படத்தில் கலக்கியுள்ளார். தற்போது தனுஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், விஜய் அண்ணா, உங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி கூப்பிடுவார் என மாளவிகா மோகனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாளவிகா, விஜய் என்னை எப்போதும் ‘மாளு’ என்றே செல்லமாக அழைப்பார் என்று கூறியுள்ளார்.

Share this story