பிரபல நடிகர் மறைவு… சோகத்தில் மலையாளத் திரையுலகம்!

பிரபல நடிகர் மறைவு… சோகத்தில் மலையாளத் திரையுலகம்!

பிரபல மலையாள நடிகர் மற்றும் எழுத்தாளர் பி.பாலச்சந்திரன் உடல்நிலை சரியில்லாமல் கடந்த எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமாகியுள்ளார். அவருக்கு 69 வயது.

இவரது மனைவி பெயர் ஸ்ரீலதா. இந்தத் தம்பதிக்கு ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சிறந்த எழுத்தாளரான பாலச்சந்திரன் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது மற்றும் கேரள நிபுணத்துவ நாடக விருதையும் பெற்றவர். சில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரபல நடிகர் மறைவு… சோகத்தில் மலையாளத் திரையுலகம்!

திருவனந்தபுரம் லாட்ஜ், ஆங்கிரி பேபிஸ் இன் லவ் மற்றும் கிஸ்மத், சார்லி உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடிக்கவும் செய்திருந்தார். மம்முட்டி நடிப்பில் வெளியான ‘ஒன்’ படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார்.

தற்போது பாலச்சந்திரனின் மறைவை அடுத்து அவருக்கு மலையாளத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this story