சிம்பு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…

சிம்பு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…

சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்துள்ள படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் மாஸாக காட்டப்பட்டுள்ளன. மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…

இதையடுத்து சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள மாநாடு படத்தின் வேலைகள் விறுவிறுப்படைந்துள்ளன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் சென்னை, ஹைதாராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புக்கு நாயகியாக கல்யாணி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் இன்று தனது ட்விட்டரில் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் சிம்பு கையில் துப்பாக்கியுடன் இருப்பது வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா கலக்கி இருக்கிறார். பொங்கல் விருந்தாக சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Share this story