நேரடி டிவிக்கு வெளியீட்டு தயாராகும் யோகிபாபுவின் ‘மண்டோலா’

நேரடி டிவிக்கு வெளியீட்டு தயாராகும் யோகிபாபுவின் ‘மண்டோலா’

புலிக்குத்தி பாண்டி, ஏலே படங்களை தொடர்ந்து யோகிபாபுவின் ‘மண்டோலா’ படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

தனது தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் யோகிபாபு. தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியில் கலக்கும் வரும் யோகிபாபு, தர்ம பிரபு , கூர்கா, கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். திரைப்படங்களில் காமெடியில் கலக்கி வந்தாலும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

நேரடி டிவிக்கு வெளியீட்டு தயாராகும் யோகிபாபுவின் ‘மண்டோலா’

இந்நிலையில் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் ‘மண்டேலா’. அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். யோகிபாபுக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஓபன் விண்டோ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் விஸ்பெர்ரி ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

நேரடி டிவிக்கு வெளியீட்டு தயாராகும் யோகிபாபுவின் ‘மண்டோலா’

பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சங்கிலி முருகன், ஜீ எம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முடிவெட்டுபவராக யோகிபாபு நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே முடித்துள்ளது.

நேரடி டிவிக்கு வெளியீட்டு தயாராகும் யோகிபாபுவின் ‘மண்டோலா’

இந்நிலையில் புலிக்குத்தி பாண்டி, ஏலே படங்களை தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியிலும், ஹாட் ஸ்டாரிலும் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் ‘மண்டேலா’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

Share this story