மாஸ்டர் இந்தி ரீமேக்கில் ’ஹிரித்திக் ரோஷன்’

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் ’ஹிரித்திக் ரோஷன்’

மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள படம் மாஸ்டர். ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் 100கோடி வசூலை தாண்டியுள்ளது.

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் ’ஹிரித்திக் ரோஷன்’

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் டப்பிங் செய்து வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை எண்டமால் ஷைன் நிறுவனம் பெற்றுள்ளது.

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் ’ஹிரித்திக் ரோஷன்’

இந்நிலையில் மாஸ்டர் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியே நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

Share this story