இந்தியில் ரீமேக்கில் ‘மாஸ்டர்’ மகிழ்ச்சியான தருணம் – படக்குழு

இந்தியில் ரீமேக்கில் ‘மாஸ்டர்’  மகிழ்ச்சியான தருணம் – படக்குழு

மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது எங்களுக்கு பெருமை என படத்தை வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்த மாஸ்டர் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட நடித்துள்ளனர். திரையரங்களில் இப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியில் ரீமேக்கில் ‘மாஸ்டர்’  மகிழ்ச்சியான தருணம் – படக்குழு

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பாகி வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர உலக அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிசிலும் ஹிட் அடித்துள்ளதால் வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காகிறது. இந்த தகவலை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் கூறியபோது, மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்கு பெருமை என்றும், தமிழில் உருவாக்கிய இந்த மாயஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு மீண்டும் உருவாக்கி காட்டுவோம் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் படத்தை விரைவில் இந்தியில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this story