வாங்கிய புது காருடன் விஜய் சேதுபதியைச் சந்தித்து ஆசி பெற்ற குட்டி பவானி!

வாங்கிய புது காருடன் விஜய் சேதுபதியைச் சந்தித்து ஆசி பெற்ற குட்டி பவானி!

நடிகர் மகேந்திரன் தான் வாங்கிய புதிய காரை விஜய் சேதுபதியிடம் காண்பித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மகேந்திரன். அதையடுத்து விழா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து வேறு சில படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

வாங்கிய புது காருடன் விஜய் சேதுபதியைச் சந்தித்து ஆசி பெற்ற குட்டி பவானி!

இருப்பினும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து மிரட்டியிருந்தார். அந்தக் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தற்போது மகேந்திரன் தன் பெயரை மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் மாற்றும் அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு புதிய கார் வாங்கிய மகேந்திரன், அதன் சாவியை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

வாங்கிய புது காருடன் விஜய் சேதுபதியைச் சந்தித்து ஆசி பெற்ற குட்டி பவானி!

தற்போது மகேந்திரன் விஜய் சேதுபதியைச் சந்தித்து தன் புதிய காரைக் காண்பித்து ஆசி பெற்றுள்ளார். “என்னோட பவானி னா” என்றும் தெரிவித்து அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story