‘என்ன நடிப்புடா சாமி’ வாழ்த்து மழையில் ‘மாஸ்டர் மகேந்திரன்’

‘என்ன நடிப்புடா சாமி’    வாழ்த்து மழையில் ‘மாஸ்டர் மகேந்திரன்’

சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் மாஸ்டர் மகேந்திரன். சிறு வயதிலேயே தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பின்னர் விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தின் அவருக்கு தம்பியாக நடித்து புகழ்பெற்றார்.

‘என்ன நடிப்புடா சாமி’    வாழ்த்து மழையில் ‘மாஸ்டர் மகேந்திரன்’

சிறு வயது முதலே சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தாலும், மகேந்திரனுக்கு பெரிதாக படவாய்ப்பு கிட்டவில்லை. கிடைத்த வாய்ப்பை விடாமல் படங்களில் நடித்து வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு வந்த மகேந்திரனுக்கு லோகேஷ் கனகராஜ் மூலம் கிடைத்தது ஜாக்பாட்.

‘என்ன நடிப்புடா சாமி’    வாழ்த்து மழையில் ‘மாஸ்டர் மகேந்திரன்’

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது பவானி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக இப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் மகேந்திரன். 10 நிமிடம்தான் படத்தில் நடித்தாலும், அவருக்கு நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

பிரேம்ல தீயாய் இருக்கீங்க, என்ன நடிப்புடா சாமி, கண்ண பாத்த பயமா இருக்குன்னு கண்ணுலயே நிக்குது என ஏகத்தும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சொல்ல வார்த்தை இல்லை.. நன்றி தெரிவித்துககொள்கிறேன் என மகேந்திரன் கூறியுள்ளார்.

Share this story