‘மாஸ்டர்’ படம் பார்க்க காத்திருக்கிறேன்… விஜய்-க்கு வாழ்த்து சொன்ன ‘நயன்தாரா’

‘மாஸ்டர்’ படம் பார்க்க காத்திருக்கிறேன்… விஜய்-க்கு வாழ்த்து சொன்ன ‘நயன்தாரா’

மாஸ்டர் படம் பார்க்க காத்திருக்கிறேன் என்று நயன்தாரா ட்வீட் செய்துள்ளார்.

‘மாஸ்டர்’ படம் பார்க்க காத்திருக்கிறேன்… விஜய்-க்கு வாழ்த்து சொன்ன ‘நயன்தாரா’

மாஸ்டர் படம் பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆட்டம்,பாட்டம் என ரசிகர்கள் மாஸ்டரை கொண்டாடி வருகின்றனர். காலை 4 மணிக்கே மாஸ்டரின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களை கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

‘மாஸ்டர்’ படம் பார்க்க காத்திருக்கிறேன்… விஜய்-க்கு வாழ்த்து சொன்ன ‘நயன்தாரா’

அரசு உத்தரவுப்படி, திரையரங்கில் 50 சதவீத இருக்கையில்தான் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். படம் தொடங்கி விஜய் வரும் காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து, விசில் அடித்து படத்தை பார்த்தனர்.

இதனிடையே நடிகை நயன்தாரா, விஜய் மற்றும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரசிகர்கள் போன்று தானும் மாஸ்டர் படம் பார்க்க ஆர்வமாக உள்ளதாக நயன்தாரா ட்வீட் செய்துள்ளார். அனைவரும் மாஸ்டர் படத்தை திரையரங்குக்கு சென்று படம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story