கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ? ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

மாஸ்டர் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி கூட்டணி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதா என்பதை பார்க்கலாம்.

கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான மாஸ்டர் படம், கொரோனாவால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

திரைக்கதை எப்படி அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் ?

இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், மூன்றாவதாக மாஸ்டர் படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். தன்னுடைய மூன்றாவது படத்திலேயே விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து தரமான படத்தை கொடுக்கமுடியும் என நிரூபித்துக்காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் முன்பு சொன்னது போல இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. விஜய்-க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார்.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

மாஸ்டர் கதை என்ன?

கல்லூரி பேராசிரியாக திரையில் தோன்றும் விஜய், மதுவுக்கு அடிமையாக இருக்கிறார். ஜே.டி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய், கல்லூரியில் நடக்கும் ஒரு பிரச்சனையால், அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். அங்கிருந்து செல்லும் விஜய், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வாத்தியராக பணியில் சேர்கிறார். அந்த பள்ளி முழுக்கமுழுக்க பவானி கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை விஜய் சேதுபதி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார். இதனால் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து பள்ளி குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை…

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

விஜய் நடிப்பது எப்படி…

கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய் அவ்வெப்போது தனது கதையென ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறார். கல்லூரி பேராசிரியருக்கும், மாணவர்களுக்கான காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியில் அஜீத்தின் காதல் கோட்டை பற்றி சொல்லும் குட்டி ஸ்டோரி ரசிகர்களை விசில் அடிக்க வைத்துள்ளது. மாஸான வாத்தியாக விஜய் வரும் காட்சிகள், வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படத்தில் பாதி விஜய் போன்றும், பாதி லோகேஷ் கனகராஜின் ஹீரோவான ஜே.டியாகவும் உள்ளார். அப்படி வேறமாதிரியாக திரையில் தோன்றியுள்ளார் விஜய். வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் ஆடும் நடனம் வேற லெவல்ல இருக்குன்னுதான் சொல்லனும்..

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

விஜய் அரசியல்

சமீப காலமாக விஜய் நடிக்கும் படங்களில் அரசியல் நொடி அதிகமாக உள்ளது. படத்துக்கு படம் அரசியல் பேசும் விஜய், இந்த படத்திலும் அரசியல் பேசியுள்ளார். மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விஜய், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஒட்டுகளை வாங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை போன்ற அரசியல் வசனங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி

நாம எதிர்பார்த்தது போல கொடூரமான வில்லனாக தோன்றியுள்ளார் விஜய் சேதுபதி. விஜய்-க்கு சமமான காட்சிகள் விஜய் சேதுபதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களே ரசிக்கும் வண்ணம் பவானி கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பு உள்ளது. விஜய் வழக்கமாக பேசும் வசனமான ‘I am waiting’ வசனத்தை விஜய் சேதுபதி பேசும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். விஜய்யும்- விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் திரையரங்கில் அனல் பறந்ததது. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது இந்த படத்தின் கதைக்கு கூடுதல் சிறப்பு. என்ன பிடிச்சவங்க நிறையப் பேர் வெளிய இருக்காங்க எனும் பேசும் வசனங்களில் விசில் பறந்ததது.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

விஜய் – மாளவிகா காதல்

விஜய் உடன் மாளவிகா நடித்துள்ள காட்சிகள் சிறப்பாகவும், அழகாகவும் அமைந்துள்ளது. அழகு பதுமையுடன் அலட்டல் இல்லாமல் விஜய் உடன் நடித்துள்ளார் மாளவிகா. குறைவான காட்சிகளே மாளவிகா வருவதால், காட்சிகளை அதிகப்படுத்தியிருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

மற்ற நடிகர்கள் எப்படி ?

விஜய் சேதுபதிக்கு அடுத்தப்படியாக வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ், அவருக்கு என்ன காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதோ அதை தரமான நடித்துள்ளார். சில காட்சிகளே அண்ட்ரியா நடித்தாலும், அந்த காட்சிகள் அழகாக அமைந்துள்ளது. சாந்தன்னு, மகேந்திரன், விஜே ரம்யா ஆகியோர் அவருக்குண்டான காட்சிகளில் கச்சிதமாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக அமைக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. அனிரூத் இசை, நம்மை வேறு உலகிற்கு கொண்டு சென்றுள்ளது. பாடல்களை பார்த்தாலே நமக்கு தெரியும், அனிரூத்தின் இசை இந்த படத்திற்கு எவ்வளவு கைகொடுத்துள்ளது என தெரியும். ஸ்டண்ட் சிவாவின் சண்டை காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது.

கொண்டாடப்படுகிறாதா “மாஸ்டர்” ?  ரசிகர்கள் என்ன சொல்றாங்க….

மொத்தத்தில் மாஸ்டர் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்ததாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு நிரப்பி வழிக்கின்றன. இந்த பொங்கல் ‘மாஸ்டர் பொங்கல்’ என கூறும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Share this story