மிரட்டும் பார்வையில் ‘விஜய்’ புதிய போஸ்டரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ் !

மிரட்டும் பார்வையில் ‘விஜய்’    புதிய போஸ்டரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ் !

நடிகர் விஜய் – விஜய் சேதுபதி மிரட்டும் பார்வையில் இருக்கும் புதிய போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படம் நாளை மறுநாள் வெளியாவதையொட்டி நாளுக்கு நாள் அப்டேட்ஸ் வந்துக்கொண்டே இருக்கிறது. மாஸ்டர் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

மிரட்டும் பார்வையில் ‘விஜய்’    புதிய போஸ்டரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ் !

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் பிரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது. அதில் விஜய் நடிக்கும் காட்சிகளை இருந்தது. பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது. இதைத்தொடர்ந்து இருவரும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள், அனல்தெறிக்கும் வசனங்கள் என ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் விஜய்யும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக இருப்பது போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படம் விஜய் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும்.

Share this story