தொடர்ந்து சிக்கலில் ‘மாஸ்டர்’ கேரளாவில் ரிலீசாகுமா ?

தொடர்ந்து சிக்கலில்  ‘மாஸ்டர்’  கேரளாவில் ரிலீசாகுமா ?

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்டர் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கு அமலில் இருந்து ஒன்றின்பின் ஒன்றாக தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதேபோன்று மாநில அரசுகளும் சூழலுக்கேற்ப தளர்வுகளை கொடுக்கலாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழக உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் திறக்க அரசு அனுமதி அளித்தது.

தொடர்ந்து சிக்கலில்  ‘மாஸ்டர்’  கேரளாவில் ரிலீசாகுமா ?

இதைத்தொடர்ந்து கேரளாலும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.

தொடர்ந்து சிக்கலில்  ‘மாஸ்டர்’  கேரளாவில் ரிலீசாகுமா ?

அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து சிக்கலில்  ‘மாஸ்டர்’  கேரளாவில் ரிலீசாகுமா ?

தமிழகம் போலவே நடிகர் விஜய்-க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்கும். அதனால் விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிட தயாரான நிலையில், திரையரங்குகள் திறக்கப்படாததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழகத்தில் அனுமதி அளித்த விவகாரத்தில் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story