“கொண்டாட்டம் களைகட்டடும் நண்பா…” பொங்கல் கொண்டாடிய ‘விஜய்’

“கொண்டாட்டம் களைகட்டடும் நண்பா…” பொங்கல் கொண்டாடிய ‘விஜய்’

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

“கொண்டாட்டம் களைகட்டடும் நண்பா…” பொங்கல் கொண்டாடிய ‘விஜய்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்துள்ள படம் மாஸ்டர். கல்லுரி வாத்தியாக தொடங்கும் படம், கடைசி வரை விறுவிறுப்பாக ஓடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய் தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. விஜய் சேதுபதியுடன், விஜய் நடிக்கும் தோன்றும் சண்டைக் காட்சி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

“கொண்டாட்டம் களைகட்டடும் நண்பா…” பொங்கல் கொண்டாடிய ‘விஜய்’

விஜய் படமா என கேள்வி கேட்கும் அளவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காட்சிகளை செதுக்கியுள்ளார். ஹூரோயின் மாளவிகா மோகனனுடனான காதல் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. பிளாக் பஸ்டர் படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இதனிடையே மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி.கிரியேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் வேட்டி கட்டி குழந்தைகள் மற்றும் படக்குழுவினருடன் பொங்கலை கொண்டாடுவது போல இருக்கிறது. இந்த வீடியோ கடந்த ஆண்டு பொங்கல் அன்று மாஸ்டர் பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என படக்குழு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Share this story