Tuesday, April 13, 2021

அது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...

Movie Stills

‘மாஸ்டர்’ விமர்சனம். பொங்கல் விருந்தா..! ‘போங்கு’ விருந்தா..!?

தொடர்ச்சியான லாக்டவுன், தியேட்டரில் ஐம்பது சதவிகித ஆடியன்ஸுக்குத்தான் அனுமதி என்று ஏக டென்ஷனுக்கு நடுவில் வந்திருக்கும் படம்தான் ‘மாஸ்டர்’ முக கவசம் போடாமலும் போதிய இடைவெளியும் இல்லாமல் எல்லா தியேட்டரிலும் வெறிகொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கு தகுதியான படமாக வந்திருக்கிறதா என்றால்; கொஞ்சம் ஏமாற்றம்தான்!

பிரபல கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார் விஜய். குடிப்பழக்கம் உள்ள பேராசிரியர் வேறு. ஆனாலும் மாணவர்களுக்குப் பிடித்தமானவராகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு ஆகாதவராகவும் இருக்கிறார். இப்படியொரு பேராசிரியர் இருந்தால் கல்லூரி நிர்வாகம் கையைக்கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்குமா என்று லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காமல் மேற்கொண்டு படியுங்கள். ஆகாதவர் என்று தெரிந்தும் அவரிடமே கல்லூரி தேர்தல் நடத்தும் பொறுப்பைக் கொடுக்கிறார்கள்! அதனால் ஏற்படும் ‘அரசியலால்’ விஜயை சிறுவர் சீர் திருத்தப்’பள்ளி’க்கு மாற்றுகிறது நிர்வாகம்.

அங்கே போனால், அங்கிருக்கும் சிறுவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அராஜகமும் அட்ராசிட்டியும் பண்ணிக்கொண்டிருக்கிறார் பவானி என்கிற விஜய் சேதுபதி. இது தெரியாமல் ஜாலியாக திரியும் விஜய்க்கு விஜய் சேதுபதியின் அட்டகாசங்கள் தெரிய வருகிறது. அப்புறம் என்ன… வில்லனுக்கும் ஹீரோவுக்குமான சேஸிங்கித்தான் கடைசிவரை.

இரண்டு ஹீரோக்கள் என்பதால் அவர்களை அறிமுகப்படுத்த கொஞ்ச நேரம், அவர்களுக்கான மோதல் எங்கே தொடங்கப் போகிறது என்பதைச் சொல்ல ஒரு லீடு என்று கதை சொல்லுகிற போக்கிலேயே பாதிப்படம் போகிறது. மீதி முழுக்க ஆக்சன், அதிரடி என விஜய், விஜய் சேதுபதி இருவரும் அதகளம் பண்ணுகிறார்கள். விஜய் படம் முழுக்க ஸ்டைலாக வருவதும், அட்டகாசமான டான்ஸைப் போட்டிருப்பதுமே விஜய் ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு பண்ணியிருப்பார் போல! ரொம்ப நாளைக்கு அப்புறம் விருந்துக்குப் போனால் இஷ்டத்துக்கு வெட்டுவோமே அதுபோல், ஒரு வருசத்துக்கு அப்புறம் படம் பார்க்க வருகிறவர்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்பிறக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ படம் மூணு மணி நேரம் ஓடுகிறது. ஒரு மணி நேரப் படத்தைக் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பதை விஜய் ரசிகர்களே ஒப்புக்கொள்வார்கள்!

தவிர,படம் பார்க்கும் போதே அந்தக் காலத்து ‘பல்லாண்டு வாழ்க’ கமலின் ‘நம்மவர்’ கொரியன் படமான ‘சைலன்ஸ’ எல்லாம் மண்டைக்குள் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை! மற்றபடி விஜய் ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு கொண்டாட்டமான படத்தைக் கொடுப்போம் என்று இயக்குனர் உழைத்திருப்பதும், விஜய் படத்தை தன் தோள் மீது தூக்கிக்கொண்டு ஒட்டியிருப்பதும் உண்மை. காட்சிக்கு காட்சி விஜய் ரசிகர்கள் தெரிக்க விடுவதிலேயே அதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அனிரூத் சில இடங்களில் ஸ்கொர் செய்திருக்கிறார். ஆனாலும் ‘scame 1992’ வெப் சீரீஸின் தீம் மியூஸிக்கை இவ்வளவு அப்பட்டமாக அடித்திருக் கூடாது. படம் நீளமாக இருக்கிறது… லாஜிக் பார்க்க மாட்டோம் என்று நீங்கள் சத்தியம் செய்து கொடுப்பதாக இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்!

Latest Posts

அது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...

தனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...

நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். தமிழில் நடிகை நமீதா என்றால்...

Actress

TTN Cinema