‘மாஸ்டர்’ அப்டேட்… விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி..!

‘மாஸ்டர்’ அப்டேட்… விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி..!

மாஸ்டர் படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நின்றவர் இளைய தளபதி விஜய்தான். அதனால்தான் விஜயே முன் வந்து ஒரு மினிஸ்டர் மூலமாக முதல்வரை ரகசியமாக சந்தித்து 100 சதவிகித ஆடியன்ஸை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துவிட்டு வந்தார்.

‘மாஸ்டர்’ அப்டேட்… விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி..!

இப்போதுவரை முதல்வர் தரப்பிலிருந்து அது குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை. தற்போது உள்ள நிலையில் படம் தியேட்டருக்கு மாஸ்டர் வந்தால் போட்ட பணத்தை எடுக்க படாத பாடு படவேண்டியிருக்கும்! அதனால், தயாரிப்பு தரப்பு மட்டுமல்ல தியேட்டர் அதிபர்களும் கொஞ்சம் ‘கிலி’யடித்துப்போய்தான் கிடக்கிறார்கள். ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்… அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இது.

‘மாஸ்டர்’ அப்டேட்… விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி..!

படம் ரிலீஸ் ஆகிற தேதியில் இருந்து ஐந்து நாட்கள் மட்டும் ஸ்பெஷல் ஷோவும் 100 சதவிகித ஆடியன்ஸை அனுமதிக்கலாம் என்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இரண்டொரு நாளில் அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள் கிரீன் வேய்ஸ் சாலை சோர்ஸ்கள். கண்டிப்பா விஜய் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு பொங்கல்தான்.

Share this story