மிரட்ட வரும் ஸ்ரீகாந்த்தின் ‘மிருகா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

மிரட்ட வரும் ஸ்ரீகாந்த்தின் ‘மிருகா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருகா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்ட வரும் ஸ்ரீகாந்த்தின் ‘மிருகா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிருகா’. அறிமுக இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிரட்ட வரும் ஸ்ரீகாந்த்தின் ‘மிருகா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஒரு புலியை முக்கியமான கதாபாத்திரமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புலியை முழுக்கமுழுக்க கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியுள்ளனர். படத்தின் ஷூட்டிங் முன்னரே முடிக்கப்பட்டாலும் வி.எப்.எக்ஸ் பணிகள் நீண்ட நாட்கள் நடந்து வந்தது. இருமொழிகளில் உருவாகும் இந்த படம் தெலுங்கில் கர்ஜணா என்ற பெயரிலும், தமிழில் மிருகா என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மிரட்ட வரும் ஸ்ரீகாந்த்தின் ‘மிருகா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இந்நிலையில் நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்த இந்த படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 5ம் தேதி ‘மிருகா’ படம் இருமொழிகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.  

Share this story