இருமொழிகளில் உருவாகும் பிரதமர் வாழ்க்கை வரலாறு…

இருமொழிகளில் உருவாகும் பிரதமர் வாழ்க்கை வரலாறு…

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் இரு பாகங்களாக உருவாக உள்ளது.

இருமொழிகளில் உருவாகும் பிரதமர் வாழ்க்கை வரலாறு…

சமீபகாலமாக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைபடங்கள்‌ உருவாகி வருகின்றன. இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதுடன் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்திராகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் திரைப்படங்களும், சச்சின்,தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது கூட மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவரவிருக்கிறது.

இருமொழிகளில் உருவாகும் பிரதமர் வாழ்க்கை வரலாறு…

இதேபோன்று உண்மை சம்பவங்களும் திரைப்படங்களாக வெளி வருகின்றன. அப்படி வெளி வந்த திரைப்படம் தான் ‘நிர்பயா’. டில்லியில் பாலியியல் வன்கொடுமையில் இறந்த நிர்பயாவின் கதை இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தை பிரபல வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்கினார்.உண்மையை உள்ளபடி சொல்லியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. இவர் ஏற்கனவே சியாம பிரசாத் முகர்ஜி வாழ்க்கை வரலாறு கதையை படமாக எடுத்தவர்.

இருமொழிகளில் உருவாகும் பிரதமர் வாழ்க்கை வரலாறு…

இந்நிலையில் இவர் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளார். ஹிந்தி மொழி மட்டும் தயாராக உள்ள இந்த படத்திற்கு ‘ஏக் அவுர் நரேன்’ என்று பெயரிப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கவுள்ளார்.இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தில் விவேகானந்தரைப் பற்றிய காட்சிகள் இடம்பெறும் கூறப்பட்டுள்ளது.

Share this story