மீண்டும் மீண்டும் மாற்றப்படும் ரிலீஸ் தேதி… சிக்கலில் மோகன் லாலின் ‘மரைக்காயர்’…

மீண்டும் மீண்டும் மாற்றப்படும் ரிலீஸ் தேதி… சிக்கலில் மோகன் லாலின் ‘மரைக்காயர்’…

மோகன் லாலின் ‘மரைக்காயர்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால், தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

மீண்டும் மீண்டும் மாற்றப்படும் ரிலீஸ் தேதி… சிக்கலில் மோகன் லாலின் ‘மரைக்காயர்’…

மலையாளத்தில் பிரம்மாண்ட உருவாகியுள்ள திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. மோகன் லாலின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் மாற்றப்படும் ரிலீஸ் தேதி… சிக்கலில் மோகன் லாலின் ‘மரைக்காயர்’…

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படை தலைவனான குஞ்சலி மரைக்காயர் வீர வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரானா காரணத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் மாற்றப்படும் ரிலீஸ் தேதி… சிக்கலில் மோகன் லாலின் ‘மரைக்காயர்’…

இதையடுத்து கடந்த மாதம் மார்ச் 26-ம் தேதி வெளியிட இருந்தனர். சில பிரச்சனைகளால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வரும் மே 13ம் தேதி வெளியிட இருந்தனர். ஆனால் அந்த தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரானாவில் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சொன்ன தேதியில் வெளியிட முடியாது. அதேசமயம் ஓடிடியில் வெளியிட பெரும் தொகை கொடுத்து வாங்க ஓடிடியில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இருந்தப்போதிலும் இந்த படம் வரலாற்று படமாக எடுக்கப்பட்டுள்ளதால், படத்தில் உள்ள பிரம்மாண்டங்களை திரையரங்குகளுக்கு சென்றால்தான் பார்த்து ரசிக்கமுடியும். ஆகவே இந்த படத்தை ஆகஸ்ட்டு 12ம் தேதி வெளியிடலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Share this story