மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

மோகன் லாலின் பிரம்மாண்ட படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

மலையாளத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இதில் நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சித்திக், பிரபு, சுஹாசினி, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

16 ஆம் நூற்றாண்டில் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கடற்படை தலைவர்களை குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இதில் 4வது குஞ்சலி மரைக்காயரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குஞ்சலி மரைக்காயர் கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார்.

மீண்டும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி… தள்ளிப்போகும் மோகன் லாலின் பிரம்மாண்ட படம்…

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரானா காரணத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து வரும் மார்ச் 26-ம் தேதி இந்த படம் ரிலீசாகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 13ம் தேதி இந்த படம் வெளியாகும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது சொன்னபடி ‘மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம்’ வெளியாகுமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story