துபாயில் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள்!

துபாயில் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள்!

மலையாள நடிகர் மோகன்லாலும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒன்றாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

Image

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க சமீபத்தி துபாய் சென்றிருந்தார். ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பை முடித்த மோகன்லாலும் ஏற்கனவே துபாயில் இருந்தார். ஐபிஎல் கடைசி மேட்சை மோகன்லால் கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று மோகன்லால் மற்றும் சஞ்சய் தத் இருவரும் ஒன்றாகச் சந்தித்து குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதற்கிடையில் சஞ்சய் தத் ‘கே.ஜி.எஃப்: 2″ படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார். அதே நேரத்தில் மோகன்லால் பி உன்னிகிருஷ்ணனின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

Share this story