”கெட் வெல் சூன் சூர்யா ” சூப்பர் ஸ்டாரின் நலம் விசாரித்த மம்முட்டி !

”கெட் வெல் சூன் சூர்யா ” சூப்பர் ஸ்டாரின் நலம் விசாரித்த மம்முட்டி !

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினி, ரத்த அழுத்த பிரச்னை காரணமாக அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதனால் கவலையடைந்துள்ள அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவர் விரைவில் நலம்பெறவேண்டி இறைவனை பிராத்தனைசெய்து வருகின்றனர். பிரபலங்கள் சிலர் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து சமூகவலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் ’தளபதி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி டுவிட்டர் பக்கத்தில் ”விரைவில் குணமடைந்து விடு சூர்யா” என தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

”கெட் வெல் சூன் சூர்யா ” சூப்பர் ஸ்டாரின் நலம் விசாரித்த மம்முட்டி !

ஏனெனில் நட்புக்கு உதாரணமாக அன்று முதல் இன்றுவரை எடுத்துக்காட்டாக கூறப்படுவது மம்முட்டி மற்றும் ரஜினியின் தளபதி படத்தின் நட்பு தான்.. அப்படத்தில் இடம்பெறும் , நட்புன்னா என்னனு தெரியுமா உனக்கு …? சூரியனா என்னனு தெரியுமா உனக்கு …? இந்த வசனங்களை யாரால் மறக்க முடியும் ??

மம்முட்டி இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Share this story