கிராமத்து இளைஞனாக கலக்கும் முகேன் ராவ்… வேலன் பர்ஸ்ட் லுக் வெளியானது!

கிராமத்து இளைஞனாக கலக்கும் முகேன் ராவ்… வேலன் பர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் கதாநாயகனாக நடித்துள்ள வேலன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது இதயங்களை வென்ற முகேன் ராவ் தற்போது வேலன் என்ற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். எனவே அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கிராமத்து இளைஞனாக கலக்கும் முகேன் ராவ்… வேலன் பர்ஸ்ட் லுக் வெளியானது!

இந்தப் படத்தில் நடிகர் பிரபு முகேனின் அப்பாவாக நடித்துள்ளார். நடிகர் சூரியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பா- மகன் பாசத்தை வைத்து கதை நகர்கிறது.

தம்பி ராமையா, ஸ்ரீ ரஞ்சனி மற்றும் சுஜாதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இந்தப்ப படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

கிராமத்து இளைஞனாக கலக்கும் முகேன் ராவ்… வேலன் பர்ஸ்ட் லுக் வெளியானது!

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் முகேன் வேஷ்டி சட்டையில் கிராமத்துப் பையனாக மிரட்டல் லுக்கில் இருக்கிறார். படத்தின் கதாநாயகியும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளார். தற்போது இந்தப் பார்ட்ஸ் லுக் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Share this story