வெளியானது சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..

வெளியானது சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் படங்களை எடுத்து வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா.., தனியே ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி அதில் படங்களை வெளியிட்டு வருகிறார். அனைவராலும் அறியப்பட்ட முன்னணி இயக்குநராக இருந்து கொண்டு ஆபாச படம் எடுப்பதாகட்டும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் பவன் கல்யாணை விமர்சித்து படம் எடுப்பாதாக இருக்கட்டும் அனைத்தையும் துணிச்சலாக செய்து வருகிறார்..
வெளியானது சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..
வரும் எதிர்ப்புகளையெல்லாம் பாராட்டாக எடுத்துக்கொண்டு அடுத வேலைகளில் கவனம் செலுத்தி வரும் ராம் கோபால் வர்மா, மர்டர் என்ற பெயரில் ஆணவக்கொலை குறித்த படத்தை எடுத்திருக்கிறார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  பிரனய் குமார் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், மாருதி ராவ் தொடர்ந்து பிரனயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
வெளியானது சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..
இதையடுத்து அம்ருதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட மாருதிராவ் கடும் கோபத்தில் கூலிப்படையை வைத்து, பிரனய் குமாரை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.  தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
வெளியானது சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..
இந்நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரணாயின் கதையை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை எடுக்க உள்ளதாகவும், பிரணாயின் மனைவி அம்ருதா, மற்றும் ஆணவக்கொலைக்கு காரணமாக கருதப்படும் அவரது தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். அதோடு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும்  ராம் கோபால் வர்மா வெளியிட்டார்.
வெளியானது சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மாவின் ‘மர்டர்’ பட ட்ரெய்லர்..
இதனைத் தொடர்ந்து படத்திற்கு தடைக்கோரி பிரணயின் தந்தை பாலசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். ராம்கோபால் வர்மா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டமும் பாய்ந்தது.
இருந்தபோதிலும் தற்போது மர்டர் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா.. இந்த ட்ரெய்லரை இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு மேற்படோர் பார்த்துள்ளனர்..

Share this story