'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar

'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் மிகத் தனித்துவமான இடம் நா.முத்துக்குமாருக்கு உள்ளது. எளிமையான சொற்களால் ரசிகர்களின் மனதில் நீங்காத பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார்.
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
காஞ்சிபுரத்தில் பிறந்த முத்துக்குமார் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் புகழ்பெற்றார். அவர் எழுதிய பல பாடல்கள் ஹிட்டாயின. செல்வராகன் – யுவன் ஷங்கர் ராஜா – நா.முத்துக்குமார் கூட்டணியில் உருவான பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் பறவையே எங்கு இருக்கிறாய் எனும் பாடல் இவரைப் புகழின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நீண்ட நாள் ஒலித்தது. தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர் நா.முத்துக்குமார். உடல்நிலை சரியில்லாமல் 2016 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி அவரோடு பழகிய, பணியாற்றிய சிலரின் கருத்துகள் இதோ…
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இலக்கியப் பயிற்சி உள்ளவர்கள் என இரண்டு ஆற்றல்களும் இணைந்து பாடல் எழுத வந்தவர்கள் மிகக் குறைவு, அவர்களில் ஒருவன்தான் முத்துக்குமார் – கவிப்பேரரசு வைரமுத்து.
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
நான் இசையமைத்த முதல் பாடலான வெயிலோடு விளையாடி எனும் பாடலை நா.முத்துக்குமார்தான் எழுதினார். என் பாடலின் வெற்றிக்கு 90 சதவிகித வெற்றி முத்துக்குமார்தான். என்னிடம் பிடிக்காததற்கு மணிக்கணக்கில் சண்டை போடுவார். பிறகு ஒரு கவிதை எழுதி எனக்கு பரிசாகத் தந்து சமாதானப்படுத்துவார். என் அண்ணனைப் போன்றவர் அவர். என் மொபைலிருந்து அவர் எண்ணை எப்போதுமே டெலிட் செய்ய மாட்டேன் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
ஒருத்தர் இறந்துவிட்டால் என்ன சொத்து சேர்த்து வைத்துவிட்டு சென்றார் எனக் கேட்பார்கள். நா.முத்துக்குமார் அவரின் சிறப்பான வரிகளை விட்டுச் சென்றிருக்கிறார் – இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

நா.முத்துக்குமாரை மிக அருகில் நின்று பார்த்திருக்கிறேன்; அத்தனை அறிந்திருந்திருக்கிறேன். பல மணி நேரம் உரையாடியிருக்கிறேன். அதிலிருந்து சொல்கிறேன். தன் மொத்த ஆன்மா மொத்தத்தையும் அந்தப் பாடல் இறக்கி எழுதியவன் முத்துக்குமார். – இயக்குநர் வசந்தபாலன்
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
முத்துக்குமாரிடன் கவித்துத்துவத்தை விடவும் நட்பு ரீதியான அணுகுமுறை நெகிழ்ச்சியானது. அது எத்தனை பேருக்கு சாத்தியப்பட்டிருக்கும்; கிடைத்திருக்கும் எனச் சொல்ல முடியாது. முத்துக்குமார் என்னுடைய ஆகச்சிறந்த நண்பர்களில் ஒருவனாக இருந்தான். என் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பனாக இருந்தான். இருவரும் திரைத்துறையில் பாடல் எழுதி வளர்ச்சியரைந்து வந்தோம். ஒரு கட்டத்தில் அவன் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியான தருணம் வந்தது. அவனுக்கு வாழ்த்துச் சொன்னபோது, ‘இது இருக்கட்டும், நீ எப்போது தேசிய விருது வாங்கப்போகிறாய்?’ என்றான். வியாபார சினிமாவின் நீக்குப் போக்குகளை அறிந்த ஒருவனால் இப்படிக் கேட்க முடியாது. அதற்கு நான், ‘நான் எங்கப்பா தேசிய விருது வாங்குவது. நீதான் வருஷா வருஷம் வாங்கிட்டு இருக்கிறாயா?’ என்றேன். இரண்டு நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டு, ‘நான் வேண்டுமானால் அடுத்த ஆண்டு முழுவதும் பாடல் எழுதாமல் இருக்கிறேன்; நீ எழுதி வாங்கிக்கொள்கிறாயா?’ என்று கேட்டான். அப்படியான நண்பனை இழந்திருக்கிறேன். – கவிஞர் யுகபாரதி
'தன் ஆன்மாவை இறக்கி பாடல் எழுதியவன்' நா.முத்துக்குமாரைப் பற்றி பிரபலங்கள்! #NaMuthukumar
 
‘முத்துக்குமார் பாடல்களைக் கேட்க சுகமாக இருக்கும். அவனும் எளிமையான சொற்களால் எழுதியிருப்பான். ஆனால், அதற்கு அவனின் மெனக்கெடல் ரொம்பவுமே வலி மிக்கது. சிறு ‘புல்லில் உறங்கும் பனியில் தெரியும், மலையின் அழகோ தாங்கவில்லை’ தத்துவம் மிக்க இந்த வரிகளை திரைப்பட பாடல்களில் கொண்டுவருவது எளிதல்ல. முத்துக்குமார் அதைச் செய்தான்’ – இயக்குநர் ராம்

Share this story