நயன்தாரா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்… ‘நெற்றிக்கண்’ டீசர் வெளியானது!

நயன்தாரா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்… ‘நெற்றிக்கண்’ டீசர் வெளியானது!

இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட இருப்பதை முன்னிட்டு ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் விஜேவாக இருந்த நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலே சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. அதன் பிறகு நயன்தாராவின் வளர்ச்சி அசுர வேகத்தில் நகர்ந்தது. தமிழின் முன்னணி ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் சிறு ஹீரோக்கள் வரை பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். இன்று பல ஆண்டுகளாக கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்… ‘நெற்றிக்கண்’ டீசர் வெளியானது!

இன்று நயன்தாரா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நயன்தாராவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படக்குழுவும் ஸ்பெஷல் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்… ‘நெற்றிக்கண்’ டீசர் வெளியானது!

டீசரில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளும் பரப்பரப்பைக் கூட்டுகிறது. படம் சீட் நுனியில் உட்கார வைக்கும் க்ரைம் த்ரில்லராக உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது.

நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். இது நயன்தாராவின் 65-வது படமாகும்.

Share this story