எப்போவுமே நான் 90-ஸ் கிட்ஸ் தான்… வைரலாகும் நஸ்ரியாவின் கியூட் டான்ஸ்!

எப்போவுமே நான் 90-ஸ் கிட்ஸ் தான்… வைரலாகும் நஸ்ரியாவின் கியூட் டான்ஸ்!

நடிகை நஸ்ரியாவின் கியூட்டான டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நஸ்ரியா ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர். இப்போதும் பலரின் மொபைல் வால்பேப்பராகவும், சோசியல் மீடியா ப்ரொபைல் பிக்ஸர்களாகவும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபலத்தின் உச்சியில் இருந்த நஸ்ரியா கடந்த 2014-ம் ஆண்டு ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். மலையாள சினிமாவின் மிகப் பிரபலமான ஜோடியாக அவர்கள் இருந்து வருகிறார்கள்.

எப்போவுமே நான் 90-ஸ் கிட்ஸ் தான்… வைரலாகும் நஸ்ரியாவின் கியூட் டான்ஸ்!

திருமணத்திற்குப் பிறகு சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த நஸ்ரியா பின்னர் கடைசியாக தனது கணவர் பஹத் உடன் ட்ரான்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது பல படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு கியூட்டாக நடனம் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் 90-ஸ் கிட்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story