நஸ்ரியாவையும் வாயசைக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி!

நஸ்ரியாவையும் வாயசைக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடிகை நஸ்ரியா டப்மாஸ் செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் நடிப்பு மற்றும் குரலில் என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியாவையும் வாயசைக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி!

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாக்கியுள்ள மாஜா என்ற தளத்தில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில்,திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலை பாராட்டி வருகின்றனர். செல்வராகவன், பார்வதி திருவொத்து, துல்கர் சல்மான் என பலர் இந்தப் பாடலை புகழ்ந்துள்ளனர்.

நஸ்ரியாவையும் வாயசைக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி!

தற்போது நடிகை நஸ்ரியாவும் இந்தப் பாடலுக்கு ரசிகையாகியுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டப்மாஸ் செய்துள்ள விடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story