Thursday, May 13, 2021

Movie Stills

சரியத் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… இந்தியா மார்க்கெட்டை பிடிக்க காய் நகர்த்தல்!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளது.

ஸ்ட்ரீமிங் தளங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வருகிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலானோர் நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்தியாவிலும் இவர்களது வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த ஊரடங்கு நாட்களில் மட்டும் பல லட்சம் சந்தாதாரர்கள் நெட்ஃபிளிக்ஸிற்குக் கிடைத்துள்ளன.

netflix

ஆனால் கடந்த மாதத்திலிருந்து நெட்ஃபிளிக்ஸ் சரிவைச் சந்தித்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாலும், போட்டி நிறுவங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாலும் நெட்ஃபிளிக்ஸ் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

நெட்ஃபிக்ஸ் இந்த ஆண்டி முதல் காலாண்டில் 22 லட்சம் சந்தாதாரர்களை நிகர அடிப்படையில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பின்னர் அடுத்த காலாண்டில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாகும் என்று அறிவித்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

சரியத் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ்... இந்தியா மார்க்கெட்டை பிடிக்க காய் நகர்த்தல்!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்கு சரியத் தொடங்கியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு அதிகப்படியான சந்தாதாரர்கள் கிடைத்ததால் அவர்களின் லாபம் அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்தியாவிலும் அழுத்தமாக கால்தடம் பாதிக்க முயற்சி எடுத்து வருகிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். ஏற்கனவே சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸ் மூலமாக ஏராளமான சந்தாதாரர்களை ஹிந்தியில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுவிட்டது. தற்போது தமிழில் முன்னணி இயக்குனர்களை வைத்து அந்தாலஜி படம் உருவாக்கி வருகிறது. கூடிய விரைவில் இந்தியா முழுக்க ஓடிடி நிறுவனங்கள் அதிக இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

கொரானாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் சென்றாயன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்றாயன். ‘மூடர் கூடம்’...
சரியத் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ்... இந்தியா மார்க்கெட்டை பிடிக்க காய் நகர்த்தல்!சரியத் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ்... இந்தியா மார்க்கெட்டை பிடிக்க காய் நகர்த்தல்!

Actress

-Advertisement-
TTN Cinema