வெளியானது வலிமை படத்தின் புதிய அப்டேட் – வைரலாகும் போட்டோ!

வெளியானது வலிமை படத்தின் புதிய அப்டேட் – வைரலாகும் போட்டோ!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக எச்.வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே தெரிந்தே ஒரு அப்டேட் தான்.

வெளியானது வலிமை படத்தின் புதிய அப்டேட் – வைரலாகும் போட்டோ!

கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்களை சரிவர அஜீத்தின் பிஆர்ஓ கொடுக்காததால் அவரை மாற்றும்படி சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களின் இந்த நடவடிக்கையால் ஆவது வலிமை படம் குறித்து விரைவில் நல்ல அப்டேட் வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.இப்படம் இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகியும் வருகிறது.

வெளியானது வலிமை படத்தின் புதிய அப்டேட் – வைரலாகும் போட்டோ!

வலிமை படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மூத்த நடிகை சுமித்ரா அஜித்தின் தாயாக இப்படத்தில் பெரும்பங்கு வகிக்கிறார்.

Share this story